முகப்புபாலிவுட்

ரன்வீர் சிங் போலீஸாக நடிக்கும் ‘சிம்பா’ பட டிரெய்லர்

  | December 03, 2018 13:15 IST
Ranveer Singh

துனுக்குகள்

  • இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார்
  • இப்படம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்காம்
  • படத்தை வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்' படத்திற்கு பிறகு ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படம் ‘சிம்பா' (SIMMBA). ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங் போலீஸாக வலம் வரவுள்ளார். ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக பிரபல நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் சோனு சூத் நடிக்கிறார். இதற்கு தமன் இசையமைத்து வருகிறார். இதனை ‘தர்மா புரொடக்ஷன்ஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட் – ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
 

இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘டெம்பர்' படத்தின் ரீமேக்காம். தற்போது, ‘சிம்பா' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்