முகப்புபாலிவுட்

எனது மகன் ஆப்ராமை ஹாக்கி ப்ளேயராக்க ஆசைப்படுகிறேன் – நடிகர் ஷாருக்கான்

  | April 10, 2018 15:55 IST
Shah Rukh Khan

துனுக்குகள்

  • ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கும் படம் ‘ஜீரோ’
  • ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம்
  • ‘சக் தே இந்தியா’ படத்தில் ஷாருக்கான் ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருந்தார்
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான், ‘Jab Harry Met Sejal’ படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் ‘ஜீரோ’. ஆனந்த்.எல்.ராய் இயக்கும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்.

ஷாருக்கான் குள்ள மனிதராக வலம் வரவுள்ளாராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா மற்றும் மகன் ஆப்ராம் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அப்போது, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஷாருக்கான் “எனது இளைய மகன் ஆப்ராமை (வயது 5) ஒரு ஹாக்கி ப்ளேயராக உருவாக்க நான் ஆசைப்படுகிறேன். ஆப்ராம் இன்னும் கிரிக்கெட் விளையாடக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆப்ராம் அவ்வப்போது கால்பந்து மட்டுமே விளையாடி வருகிறார்” என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சக் தே இந்தியா’ எனும் படத்தில் ஷாருக்கான் ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்