விளம்பரம்
முகப்புபாலிவுட்

ஸ்ரீதேவி நடித்து வரும் புதிய திரைப்படம் 'MOM'

  | March 14, 2017 18:11 IST
Movies

துனுக்குகள்

  • 1980 களில் முன்னணி நடிகை ஸ்ரீ தேவி
  • பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்
  • 2012 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்
நடிகை ஸ்ரீதேவி சத்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 1980-களில் தமிழ், தெலுகு, கன்னடம், ஹிந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமா துறைக்கு முழுக்கு போட்டார் நடிகை ஸ்ரீதேவி. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட நடிகை ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் 2012-ஆம் வருடம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். படமும் எதிர்பார்த்தை விட எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் வருடம் இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ திரைபடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுகு மொழியில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரும்ப பெற்றார்.

இந்நிலையில், இப்போது சப்தமேயில்லாமல் ‘MOM’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி, தமிழ், தெலுகு ஆகிய மொழிகளில் வெளி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ரவி உதயாவர் என்பவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை மாதம் 14 ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பு குழு தயாராகி வருகின்றனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்