முகப்புபாலிவுட்

வருண் தவான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ‘சுய் தாகா’ ஃபர்ஸ்ட் லுக்

  | August 10, 2018 15:42 IST
Sui Dhaaga First Look

துனுக்குகள்

  • இப்படத்தில் வருண் தவான் தையல்காரராக நடித்து வருகிறார்
  • அனுஷ்கா ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராக வலம் வரவுள்ளார்
  • இதன் டிரெய்லரை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
பாலிவுட்டில் நடிகர் வருண் தவான், நடிகை அனுஷ்கா ஷர்மா சேர்ந்து நடித்து வரும் படம் ‘சுய் தாகா’. இந்த படத்தை இயக்குநர் ஷரத் கட்டரியா இயக்கி வருகிறார். இதனை ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதற்கு அனு மாலிக் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வருண் தவான் தையல்காரராகவும், அனுஷ்கா ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் வலம் வரவுள்ளனர். தற்போது, வருண் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
 
.இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தின் டிரெய்லரை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதியும், படத்தை செப்டம்பர் 28-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்