முகப்புபாலிவுட்

‘மேடம் டூஸாட்ஸ்’ல் இடம்பிடித்த சன்னி லியோனின் மெழுகுச்சிலை

  | September 19, 2018 13:20 IST
Sunny Leone

துனுக்குகள்

  • ஆபாச படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகை சன்னி லியோன்
  • தற்போது, ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்
  • ‘மேடம் டூஸாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்க
ஆபாச படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகை சன்னி லியோன், பாலிவுட் திரையுலகில் என்ட்ரியாகி பல படங்களில் நடித்து வந்தார். தற்போது, இவர் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

சரித்திர படமாக உருவாகிவரும் இதற்காக சன்னி லியோன் பிரத்யேகமாக கத்திச் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு (வீரமஹாதேவி) என 2 மொழிகளில் தயாராகும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ‘மேடம் டூஸாட்ஸ்’ என்ற அருங்காட்சியகத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெழுகுச் சிலையை சன்னி லியோனே திறந்து வைத்தாராம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்