முகப்புபாலிவுட்

'கரேன்ஜிட் டு சன்னி' தயாராகிறது சன்னி லியோன் பற்றிய ஆவணப்படம்

  | March 09, 2018 16:22 IST
Karenjit To Sunny

துனுக்குகள்

  • கவர்ச்சிப் பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன்
  • இப்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்
  • இவரைப் பற்றிய ஆவணப்படம் தயாராகிறது
கவர்ச்சிப் பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் அந்தப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதை துவங்கினார். ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் திரையிலும் அறிமுகமானார். தற்போது வடிவுடையான் இயக்கும் 'வீரமாதேவி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தற்போது இவரைப் பற்றிய ஆவணப்படம் உருவாவது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. 'கரேன்ஜிட் டு சன்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் கரேன்ஜித் கௌர் வோஹ்ரா என்றவர் சன்னி லியோனாக எப்படி மாறினார்? கன்னடாவில் இருந்து ஏன் வந்தார்? அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டது? போன்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் இருக்குமாம்.

இதை தனது இன்ஸ்டகிராம் போஸ்டில் பதிவிட்டிருக்கிறார் சன்னி லியோன். இந்த ஆவணப்படத்தை ஜீ டி.வி தயாரிக்கிறது. விரைவில் இது பற்றிய மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்