விளம்பரம்
முகப்புபாலிவுட்

பல்கலைக்கழகத்தில் நடனமாடி கலக்கிய டாப்ஸி

  | September 09, 2017 17:01 IST
Tapsee Pannu

துனுக்குகள்

  • ஆடுகளம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் டாப்ஸி
  • தொடர்ந்து தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை
  • ஜூட்வா 2 என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்
தமிழ் சினிமா உலகில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம், லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை டாப்ஸி. அதன் பின் தமிழில் பெரிய திரைப்படங்களுக்கான வாய்ப்பு கிடைக்காததால், இந்தி உலகிற்கு கவனம் செலுத்தினர். அங்கும் 'தி பிங்க்', 'நாம் சபானா' ஆகிய திரைப்படங்களில் வரிசையாக நடித்தார். இப்படங்களை தொடர்ந்து தற்போது, ஜூட்வா 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பில் வரும் முதல் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்படத்தின் வெளியிட்டிருக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் விளம்பர படுத்துதல் நிகழ்ச்சிக்காக பல நகரங்களுக்கு சுற்றி வருகிறார் டாப்ஸி. அதன் தொடர்ச்சியில், சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்திற்கு இப்படத்தின் கதாநாயகன் வருண் தவானுடன் டாப்ஸியும் சென்றிருந்தார். அங்கு ஜூட்வா2 திரைப்படத்தில் வரும் 'ஊஞ்சி ஹை பில்டிங்' என்ற பாடலுக்கு இருவரும் மாணவர்கள் முன்னிலையில் நடமாடியுள்ளனர். 'ஊஞ்சி ஹை' என்ற பாடல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் வந்த ஜூட்வா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்