முகப்புபாலிவுட்

இந்தி 'அர்ஜுன் ரெட்டி'க்கு ஜோடி ரெடி

  | May 23, 2018 12:24 IST
Arjun Reddy Hindi Remake

துனுக்குகள்

  • டோலிவுட்டில் ‘அர்ஜுன் ரெட்டி’ மெகா ஹிட்டானது
  • இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நடிக்கிறார்
  • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சந்தீப் ரெட்டியே ஹிந்தியிலும் இயக்கவிருக்கிறார்
டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கிறார். ‘வர்மா’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். தற்போது, இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக்காகவுள்ளது.

பாலிவுட் வெர்ஷனில் விஜய் தேவரகொண்டா ரோலில் ஷாஹித் கபூர் நடிக்கவுள்ளார். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சந்தீப் ரெட்டியே இதனையும் இயக்கவிருக்கிறாராம். ஷாஹித் கபூருக்கு ஜோடியாக தாரா சுடரியா நடிக்கவிருக்கிறார். படத்தின் ஷூட்டிங்கை ஜூலை மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்