முகப்புபாலிவுட்

‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் இருந்து விலகிய தாரா சுடரியா

  | September 07, 2018 15:34 IST
டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கிறார். ‘வர்மா’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. பாலிவுட் வெர்ஷனில் விஜய் தேவரகொண்டா ரோலில் ஷாஹித் கபூர் நடிக்கிறார்.

ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சந்தீப் ரெட்டியே இதனையும் இயக்கி வருகிறாராம். முதலில், இதில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க தாரா சுடரியா ஒப்பந்தமானார். தற்போது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்திலிருந்து தாரா சுடரியா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூன் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்