முகப்புபாலிவுட்

அமிதாப் பச்சன், அமீர் கான் சேர்ந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ டிரெய்லர்

  | September 27, 2018 13:27 IST
Thugs Of Hindostan

துனுக்குகள்

  • ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்து வருகின்றனர்
  • இதில் அமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனா ஷைக் நடிக்
  • படத்தை 3 மொழிகளிலும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலிவுட்டில் ‘டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்து வருகின்றனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இதில் அமீர் கானுடன் அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனா ஷைக் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அஜய் – அதுல் இணைந்து இசையமைத்து வரும் இதற்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார், ரித்தேஷ் சோனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் மோஷன் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

தற்போது, இந்த படத்தின் டிரெய்லரை அமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்