விளம்பரம்
முகப்புபாலிவுட்

சில்வெஸ்டர் ஸ்டாலனின் ‘ராம்போ’ ரீமேக்கில் டைகர் ஷெராஃப்

  | May 19, 2017 18:05 IST
Rambo Movie Hindi Remake

துனுக்குகள்

  • பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப்
  • டாம் க்ரூஸ்ஸின் ‘நைட் அண்ட் டே’ படத்தின் ரீமேக் ‘பேங் பேங்’
  • ‘பாக்ஹி 2’வின் ஃபர்ஸ்ட் லுக் செம வைரலானது
ஹிந்தியில் ‘ஹீரோபண்டி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் டைகர் ஷெராஃப். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகன். ‘ஹீரோபண்டி’-க்கு பிறகு இவரது நடிப்பில் வெளியான ‘பாக்ஹி, ஏ ஃப்ளையிங் ஜட்’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, சபீர் கானின் ‘முன்னா மைக்கேல்’ படத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் அஹ்மத் கானின் ‘பாக்ஹி 2’ உள்ளது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் டைகர் ஷெராஃப். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளார். இது ஹாலிவுட்டில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ராம்போ’ படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காம். இந்த அறிவிப்பே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனை ‘M! கேபிட்டல் வென்சர்ஸ் – ஒரிஜினல் எண்டர்டெயின்மென்ட் – இம்பேக்ட் ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சித்தார்த் ஆனந்த் பிக்சர்ஸ்’ மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறதாம். படத்தின் போட்டோஷூட்டை அடுத்த ஆண்டு 2018 பிப்ரவரி மாதத்தில் நடத்தவும், அதனைத் தொடர்ந்து ஷூட்டிங்கை வெகு விரைவில் துவங்கவும் திட்டமிட்டுள்ளது படக்குழு. படத்தை 2018-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளனர். ஏற்கெனவே, சித்தார்த் ஆனந்த் இயக்கிய ‘பேங் பேங்’ ஹிந்தி படமும் டாம் க்ரூஸ் நடித்த ‘நைட் அண்ட் டே’ என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்