விளம்பரம்
முகப்புபாலிவுட்

எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘டியூப்லைட்’

  | May 05, 2017 11:43 IST
Tubelight  Movie Teaser

துனுக்குகள்

  • ‘சுல்தான்’ திரைப்படம் மெகா ஹிட்டானது
  • சல்மான் கானுக்கு ஜோடியாக சைனீஸ் நடிகை டூயட் பாடி ஆடியுள்ளார்
  • சல்மான் கான் – கபீர் கான் காம்போவில் ரெடியாகியுள்ள 3-வது படம்
பாலிவுட்டில் ‘சுல்தான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் ரெடியாகி வரும் படம் ‘டியூப்லைட்’. இப்படத்தை கபீர்கான் என்பவர் இயக்கி வருகிறார். ஏற்கெனவே, சல்மான் - கபீர்கான் காம்போவில் ரிலீஸான ‘ஏக் தா டைகர், பஜ்ரங்கி பாய்ஜான்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோயினாக சைனீஸ் நடிகை ஷு ஷு நடித்துள்ளார்.

‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானும் கெஸ்ட் ரோலில் தோன்றவுள்ளாராம். ப்ரீதம் இசையமைத்து வரும் இதற்கு அசீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை இயக்குநர் கபீர் கானின் ‘கபீர் கான் பிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சல்மான் கான் பிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார் சல்மான் கான். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்ட படத்தின் ஷார்ட் ப்ரோமோ மற்றும் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று இரவு படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை சல்மான் ட்விட்டினார். இந்த டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருவதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை ஜூன் 23-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்