விளம்பரம்
முகப்புபாலிவுட்

வருண் தவான் நடித்துள்ள ‘அக்டோபர்’ ஹிந்தி பட டிரெய்லர்

  | March 12, 2018 14:44 IST
October Movie Trailer

துனுக்குகள்

  • வருண் தவானுக்கு ஜோடியாக பணிடா சந்து டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இன்று வருண் தவான் ட்வீட்டரில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்
பாலிவுட்டில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்டோபர்’. சூஜித் சர்கர் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக பணிடா சந்து டூயட் பாடி ஆடியுள்ளார்.

ஷாந்தனு மொய்த்ரா – அனுபம் ராய் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு ஜுகி சதுர்வேதி கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார். ‘ரைசிங் சன் பிலிம்ஸ் – கினோ வொர்க்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, வருண் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்