ஹரியின் ‘சாமி ஸ்கொயர்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்', ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா', ராஜேஷ்.எம்.செல்வாவின் ‘கடாரம் கொண்டான்' என மூன்று படங்கள் உள்ளது.
இதில் ‘மஹாவீர் கர்ணா' திரைப்படம் ஹிந்தி, தமிழ் என 2 மொழிகளில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. ஹிஸ்டாரிக்கல் பீரியட் படமான இதனை ‘யுனைடெட் ஃபிலிம் கிங்டம்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
நேற்று (டிசம்பர் 3-ஆம் தேதி) இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஷூட்டிங் துவங்கப்படுமாம். படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.