முகப்புபாலிவுட்

சீனாவிலாவது கல்லா கட்டுமா அமீர் கானின் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’?

  | December 05, 2018 14:19 IST
Thugs Of Hindostan

துனுக்குகள்

  • கடந்த மாதம் நவம்பர் 8-ஆம் தேதி வெளியான படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’
  • இதில் அமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப் நடித்திருந்தனர்
  • இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது
பாலிவுட்டில் ‘டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படங்களின் வெற்றிக்கு பிறகு அமீர் கான் நடித்து கடந்த மாதம் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்'. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியிருந்த இதில் அமீர் கானுடன் அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனா ஷைக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

அஜய் – அதுல் இணைந்து இசையமைத்திருந்த இதற்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரித்தேஷ் சோனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று ஃப்ளாப்பானது. சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கான் இது குறித்து பேசுகையில் “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்திற்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் ரெஸ்பான்ஸுக்கு நான் தான் பொறுப்பு.

நாங்கள் செய்த படத்தில் தவறு உள்ளது, அதனால்தான் பலருக்கு இப்படம் பிடிக்கவில்லை. தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஏமாற்றமடைந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை தியேட்டர்களுக்கு வந்தவர்களை ரசிக்க வைக்க முடியாமல் போனதுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால், நிச்சயம் அடுத்த தடவை நாங்கள் இதைவிட கடினமாக உழைப்போம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலாவது கல்லா கட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்