முகப்புபாலிவுட்

ப்ரியங்கா சோப்ரா படத்தில் இணைந்த 'டங்கல்' சைரா வாசிம்

  | July 24, 2018 14:06 IST
The Sky Is Pink

துனுக்குகள்

  • சல்மான் கானின் ‘பாரத்’ படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா
  • இப்படத்துக்கு ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம்
  • ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்
பாலிவுட்டில் ‘ஜெய் கங்காஜல்’ படத்திற்கு பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா, சல்மான் கானின் ‘பாரத்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கி வருகிறார். இதனை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தி ஸ்கை இஸ் பிங்க்’ (The Sky is Pink) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை 'மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா' இயக்கிய சோனாலி போஸ் இயக்கவுள்ளார். இதில் முக்கிய வேடங்களில் ஃபர்ஹான் அக்தர், ‘டங்கல்’ படத்தில் அமீர்கான் மகளாக நடித்த சைரா வாசிம் நடிக்கவுள்ளனர்.

இதற்கு ப்ரிதம் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தை சித்தார்த் ராய் கபூர் மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்