முகப்புஹாலிவுட்

எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ டீசர்

  | December 08, 2018 14:45 IST
Avengers 4

துனுக்குகள்

  • ஹாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவெஞ்சர்ஸ்’
  • இதன் மூன்று பாகங்களும் சூப்பர் ஹிட்டானது
  • தற்போது, நான்காம் பாகமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ உருவாகி வருகிறது
ஹாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவெஞ்சர்ஸ்'. முக்கியமான மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் களமிறங்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இதன் பார்ட் 2-வான ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்' 2015-ஆம் ஆண்டிலும், 3-ஆம் பாகமான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' இந்த ஆண்டும் (2018) வெளியானது.

தற்போது, இதன் நான்காம் பாகமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர்கள் ஆண்டனி ருஸ்ஸோ - ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்கி வருகிறார்கள். படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்கின்றனர்.
 

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்