முகப்புஹாலிவுட்

எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘கேப்டன் மார்வெல்’ புதிய டிரெய்லர்

  | December 04, 2018 11:29 IST
Captain Marvel

துனுக்குகள்

  • ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ இறுதியில் ‘கேப்டன் மார்வெல்’ அறிமுகம்
  • இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் உருவாகி வருகிறது
  • அடுத்த ஆண்டு (2019) மார்ச் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
ஹாலிவுட்டில் இந்த ஆண்டு (2018) வெளியாகி மெகா ஹிட்டான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ‘கேப்டன் மார்வெல்' என்ற பெண் சூப்பர் ஹீரோ அறிமுகம் செய்யப்பட்டது. இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் உருவாகி வருகிறது. இதில் ‘கேப்டன் மார்வெல்' கேரக்டரில் ப்ரி லார்சன் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர்கள் அண்ணா போடென் – ரியான்.கே.ஃப்ளெக் இணைந்து இயக்கி வருகிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்கின்றனர்.
 

தற்போது, படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ‘சூப்பர் ஹீரோ' பட ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) மார்ச் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்