முகப்புஹாலிவுட்

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ப்ரூஸ் லீயின் 'என்டர் தி ட்ராகன்'

  | July 25, 2018 18:52 IST
Enter The Dragon

துனுக்குகள்

  • 1973ல் வெளியான படம் 'என்டர் தி ட்ராகன்'
  • ப்ரூஸ் லீயின் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டது
  • இப்படத்தை ரீமேக் செய்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்
ராபர்ட் க்ளவ்ஸ் இயக்கத்தில் ப்ரூஸ் லீ நடித்த படம் 'என்டர் தி ட்ராகன்'. ப்ரூஸ் லீயின் மரணத்துக்குப் பின் வெளியான இப்படம் அவரது கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டது. இப்படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

இதற்கு முன் ஸ்பைக் லீ, ப்ரட் ரேட்னர் ஆகியோர் இந்த ரீமேக்கை இயக்குவதற்காக அணுகப்பட்டார்கள். இப்போது இந்த ரீமேக் இயக்குவதற்காக டேவிட் லிட்சை அணுகியிருக்கிறதாம் வார்னர் பிரதர்ஸ்.

'அடாமிக் பிளான்ட்', 'டெட் பூல் 2' ஆகிய படங்களை இயக்கியவர் டேவிட் லிட்ச். இவரின் என்டர் தி ட்ராகன் ரீமேக் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. காரணம் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஸ்பின் ஆஃப் படமான `ஹாப்ஸ் அன்ட் ஷா' படத்தின் வேலைகளில் இருக்கிறார். கூடவே, 'என்டர் தி ட்ராகன்' படத்தின் ரீமேக்கிற்கான திரைக்கதை எழுத்தாளருக்கான தேடுதலும் நடந்து வருகிறது எனத் தெரிவித்திருக்கிறதாம் வார்னர் பிரதர்ஸ். இப்போது படத்தின் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்