முகப்புஹாலிவுட்

தனுஷ் வெளியிட்ட 'டெட் பூல் 2’ தமிழ் வெர்ஷன் டிரெய்லர்

  | May 10, 2018 11:22 IST
Deadpool 2

துனுக்குகள்

  • 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் ஹீரோ’ படம் ‘டெட் பூல்’
  • இந்த படத்தின் 2-ஆம் பாகம் தயாராகியுள்ளது
  • இப்படத்தை மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
ஹாலிவுட்டில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் ஹீரோ’ படம் ‘டெட் பூல்’. ரியான் ரெனால்ட்ஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் 2-ஆம் பாகம் தயாராகியுள்ளது. இதனை டேவிட் லிட்ச் என்பவர் இயக்கியுள்ளார்.

படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் டப் செய்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ் வெர்ஷனின் புதிய டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

இந்த டிரெய்லர் கோலிவுட் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்