முகப்புஹாலிவுட்

'DeadPool 2' பட ஃபைனல் டிரெய்லர்

  | April 20, 2018 11:49 IST
Deadpool 2

துனுக்குகள்

  • டிம் மில்லர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'டெட் பூல்'
  • சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமான படமாய் ரசிகர்களைக் கவர்ந்தது
  • இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மே 18ல் வெளியாகிறது
2016ல் டிம் மில்லர் இயக்கத்தில் வெளியான படம் 'டெட் பூல்'. மார்வல் காமிக்ஸை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் போஸ்டர், ஆரம்ப காட்சி, டீசர், டிரெய்லர் என எல்லாவற்றையும் ரசிகர்கள் வரவேற்றார்கள். இப்போது இந்தப் படத்தின் ஃபைனல் டிரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது.
 

இந்த இரண்டாம் பாகத்தை டிம் மில்லருக்கு பதிலாக, 'எஸ்கேப் ப்ளான்', 'ஹிட் மேன்', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' போன்ற படங்களை இயக்கிய டேவிட் லிட்ச் இயக்கியிருக்கிறார். மே 18ம் தேதி வெளியாகவிருக்கிறது படம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்