முகப்புஹாலிவுட்

காமெடியில் கலக்கும் `Deadpool 2' டிரெய்லர்

  | February 08, 2018 14:08 IST
Deadpool 2 Trailer

துனுக்குகள்

  • 2016ல் வெளியான Deadpool படம் பலத்த வரவேற்ப்பு பெற்றது
  • இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது
  • இப்படம் மே 18ல்வெளியாகிறது
2016ல் டிம் மில்லர் இயக்கத்தில் வெளியான படம் 'Deadpool'. ஃபேபியன் நிசிஸா, ராப் லிஃபல்ட் எழுதிய காமிக்ஸை மையமாக வைத்து படமாக்கப்பட்ட இதில், ரியன் ரெனால்ட்ஸ், மொரினா பெகாரின், எட் ஸ்க்ரின் எனப் பலரும் நடித்திருந்தனர். சூப்பர் ஹீரோ கதைகளில் இருந்து விலகி வித்தியாசமான படமாக இருந்ததால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது படம்.

படத்திற்கு கிடைத்த வரவேற்பால், உடனடியாக இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது உருவாகிவரும் 'Deadpool 2' படத்தின் கதாபாத்திரமான கேபிள் பற்றிய டீசர், டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான வீடியோ க்ளிபிங்ஸ், போஸ்டர்கள் போல இந்த டீசரும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

'ஜான் விக்', 'அட்டாமிக் ப்ளான்ட்' ஆகிய படங்களை இயக்கிய டேவிட் லிட்ச் 'Deadpool 2'வை இயக்கியிருக்கிறார். இப்படம் மே 18ம் தேதி வெளியாகவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்