முகப்புஹாலிவுட்

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ டிரெய்லர்

  | April 27, 2018 10:55 IST
The Extraordinary Journey Of The Fakir

துனுக்குகள்

  • நடிகராக தனுஷ் கைவசம் 7 படங்கள் உள்ளது
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை மே 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில் குமாரின் புதிய படங்கள், கென் ஸ்காட்டின் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதனையடுத்து ஒரு பீரியட் படத்தை இயக்கி, நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.

இதில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தை கென் ஸ்காட் எனும் கனடா இயக்குநர் இயக்கி வருகிறார். இந்தப் படம் இதே பெயரில் உள்ள நாவலின் தழுவலாம். இப்படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக தனுஷ் நடித்துள்ளார். தனுஷுடன் BERENICE BEJO, BARKHAD ABDI, ERIN MORIARTY, ABEL JAFRI ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 

‘BRIO ஃபிலிம்ஸ் – VAMONOS ஃபிலிம்ஸ் – லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் – ஸ்கோப் பிக்சர்ஸ் – M! கேபிடல் வென்சர்ஸ் – இம்பேக்ட் ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, தனுஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை மே 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்