முகப்புஹாலிவுட்

கேல் கடோட்டின் ‘வொண்டர் வுமன் 1984’ ஷூட்டிங் அப்டேட்

  | December 24, 2018 16:38 IST
Wonder Woman

துனுக்குகள்

  • டிசி காமிக்ஸின் பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ‘வொண்டர் வுமன்’
  • கடந்த ஆண்டு வெளியான ‘வொண்டர் வுமன்’ படம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் சீக்குவலை 2020-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
டிசி காமிக்ஸின் பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ‘வொண்டர் வுமன்'. இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து கடந்த ஆண்டு (2017) ஹாலிவுட்டில் வெளியான முழுநீளப் படம் ‘வொண்டர் வுமன்'. கேல் கடோட் வொண்டர் வுமனாக நடித்திருந்த இந்த படத்தை பேட்டி ஜென்கின்ஸ் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் சீக்குவலான ‘வொண்டர் வுமன் 1984' படத்துக்காக மீண்டும் கேல் கடோட், பேட்டி ஜென்கின்ஸ் கைகோர்த்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தை 2020-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்