முகப்புஹாலிவுட்

‘காட்ஸில்லா 2: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்’ படத்தின் புதிய டிரெய்லர்

  | December 11, 2018 17:59 IST
Godzilla

துனுக்குகள்

  • 2014-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படம் ‘காட்ஸில்லா’
  • இதன் சீக்குவலான ‘காட்ஸில்லா 2: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்’ உருவாகி வருகிறது
  • அடுத்த ஆண்டு (2019) மே 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘காட்ஸில்லா' சீரிஸின் ரீபூட் வெர்ஷனாக 2014-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படம் ‘காட்ஸில்லா'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் சீக்குவலான ‘காட்ஸில்லா 2: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்' உருவாகி வருகிறது.

இந்த படத்தை மைக்கேல் டஃபர்டி இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் கைல் சேண்ட்லர், வேரா ஃபார்மிகா, சாலி ஹாக்கின்ஸ், மில்லி பாபி ப்ரவுன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
 


சமீபத்தில், படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று புதிய டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 31-ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்