முகப்புஹாலிவுட்

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ புதிய பாகத்தில் ஜானி டெப் இல்லையா?

  | December 24, 2018 17:29 IST
Johnny Depp

துனுக்குகள்

  • ‘தி கர்ஸ் ஆஃப் தி பிளாக் பேர்ல்’ 2003-ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான
  • ‘ஜாக் ஸ்பேரோ’ கதாபாத்திரத்தில் வலம் வந்து கவனத்தை ஈர்த்தவர் ஜானி டெப்
  • இதன் அடுத்த பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளது ‘டிஸ்னி’ நிறுவனம்
ஹாலிவுட்டில் கரீபியன் தீவுகளில் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தி கர்ஸ் ஆஃப் தி பிளாக் பேர்ல்'. 2003-ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து ‘டெட் மேன்'ஸ் செஸ்ட்' (2006), ‘அட் வேர்ல்ட்'ஸ் எண்டு' (2007), ‘ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்' (2011), ‘டெட் மேன் டெல் நோ டேல்ஸ்' (2017) என தொடர்ந்து 4 பாகங்கள் ரிலீஸானது. இந்த ஐந்து பாகங்களிலுமே, ‘கேப்டன் ஜாக் ஸ்பேரோ' என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜானி டெப்.

தற்போது, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' சீரிஸை தயாரித்து வரும் ‘வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்' நிறுவனம், இதன் அடுத்த பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாம். ஆனால், இந்த படத்தில் ‘கேப்டன் ஜாக் ஸ்பேரோ' கேரக்டரில் ஜானி டெப்புக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க ‘டிஸ்னி' நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜானி டெப் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்