முகப்புஹாலிவுட்

'மிஸ்டர் பீன்’ புகழ் ரோவன் அட்கின்ஸன் மிரட்டும் ‘ஜானி இங்க்லீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகைன்’ டிரெய்லர்

  | April 06, 2018 13:47 IST
Rowan Atkinson

துனுக்குகள்

  • 2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜானி இங்க்லீஷ்’
  • இதன் மூன்றாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது
  • இதிலும் ‘மிஸ்டர் பீன்’ புகழ் ரோவன் அட்கின்ஸன் ஹீரோவாக நடிக்கிறார்
ஹாலிவுட்டில் 2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜானி இங்க்லீஷ்’. இப்படம் சூப்பர் ஹிட்டாக, இதன் இரண்டாம் பாகமான ‘ஜானி இங்க்லீஷ் ரீபார்ன்’ 2011-ஆம் ஆண்டு ரிலீஸானது. இவ்விரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் மூன்றாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. ‘ஜானி இங்க்லீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகைன்’ என டைட்டிலிட்டுள்ள இதிலும் முந்தைய பாகங்களில் அசத்திய ‘மிஸ்டர் பீன்’ புகழ் ரோவன் அட்கின்ஸன் ஹீரோவாக நடிக்கிறார். வில்லியம் டேவிஸ் திரைக்கதை எழுதியுள்ள இதனை டேவிட் கெர் இயக்கி வருகிறார்.
 

நேற்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரோவன் அட்கின்ஸனின் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை இந்தாண்டு (2018) செப்டெம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘யுனிவர்சல் பிக்சர்ஸ்’ நிறுவனம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்