முகப்புஹாலிவுட்

கேனு ரீவ்ஸ் நடிக்கும் ‘ஜான் விக் 3’ ரிலீஸ் ப்ளான்

  | October 04, 2018 16:58 IST
Keanu Reeves

துனுக்குகள்

  • ‘ஜான் விக்’ பார்ட் 1 & 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்ட
  • இதன் மூன்றாம் பாகத்திலும் கேனு ரீவ்ஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார்
  • இப்படத்திலும் மிரட்டலான சண்டைக்காட்சிகள் இடம்பெறுமாம்
ஹாலிவுட்டில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜான் விக்’. இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு (2017) ரிலீஸானது. இவ்விரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

தற்போது, படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுகிறது. இதிலும் முந்தைய பாகங்களில் மிரட்டிய கேனு ரீவ்ஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார். இதனை இயக்குநர் சாட் ஸ்டாலெஸ்கி இயக்கி வருகிறார். பார்ட் 1 & 2 போல் இப்படத்திலும் மிரட்டலான சண்டைக்காட்சிகள் இடம்பெறுமாம்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், இந்த படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்