முகப்புஹாலிவுட்

'மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்' படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ

  | June 04, 2018 17:35 IST
Mission Impossible Fallout - Helicopter Stunt Behind The Scenes

துனுக்குகள்

  • இதுவரை வெளியான ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் இப்படம் 6-வது பாகமாம்
  • இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டப் செய்கின்றனர்
  • இதனை ஜூலை 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
ஹாலிவுட்டில் ‘தி மம்மி, அமெரிக்கன் மேட்’ படங்களுக்கு பிறகு டாம் க்ரூஸ் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’. இதுவரை வெளியான ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் இப்படம் 6-வது பாகமாம். இந்த படத்தை இதற்கு முந்தைய பாகமான ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவெரி இயக்கி வருகிறார்.

பொதுவாகவே ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் மிரட்டலான சண்டைக்காட்சிகள் இடம்பெறும். அதேபோல், இதிலும் அதிக ஆக்ஷன் சீன்ஸ் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் படத்தில் வரும் ஹெலிகாப்டர் ஸ்டன்ட் காட்சியின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 


அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் டப் செய்கின்றனர். தற்போது, படத்தில் வரும் ஹாலோ ஜம்ப் ஸ்டன்ட் (HALO Jump Stunt) காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தை வருகிற ஜூலை 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்