முகப்புஹாலிவுட்

இந்தியாவில் அட்வான்ஸாக ரிலீஸாகும் ‘மோர்ட்டால் என்ஜின்ஸ்’

  | November 24, 2018 16:14 IST
Mortal Engines

துனுக்குகள்

  • பிலிப் ரிவே என்பவர் எழுதிய நாவல் ‘மோர்ட்டால் என்ஜின்ஸ்’
  • இந்நாவலை மையமாக வைத்து இதே பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது
  • படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடவுள்ளனர்
பிலிப் ரிவே என்பவர் எழுதிய நாவல் ‘மோர்ட்டால் என்ஜின்ஸ்'. தற்போது, இந்த நாவலை மையமாக வைத்து இதே பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கிரிஸ்டியன் ரிவெர்ஸ் இயக்கியுள்ளார். இதில் ஹீரா ஹில்மர், ராபர்ட் ஷீகன், ஹியுகோ வீவிங், ஜிஹேய் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனை ‘யுனிவர்சல் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 டிரெய்லர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்துள்ளனர். ஏற்கெனவே, படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே டிசம்பர் 7-ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்