முகப்புஹாலிவுட்

குடும்பத்துடன் பார்க்கும்படி உருவாகியிருக்கும் `Once Upon A Deadpool'

  | November 20, 2018 14:47 IST
Dead Pool

துனுக்குகள்

  • மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரம் டெட்பூல்
  • 2016ல் இது படமாக வெளிவந்தது
  • இதன் இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளியானது
மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் `டெட்பூல்'. 2016ல் டிம் மில்லர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியானது `டெட்பூல்' ரேயன் ரெனால்ட்ஸ் நடித்திருந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற இதன் இரண்டாவது பாகமும் உருவானது. டேவிட் லிட்ச் இயக்கத்தில் உருவான இப்படமும் மிகப் பெரிய ஹிட்.

தெறிக்கும் ரத்தம், பறக்கும் கெட்ட வார்த்தைகள், செக்ஸ் காட்சிகள் என அடல்ட்ஸ் ஒன்லி படமாக இருந்த இப்படத்திற்கு என தனி ரசிகர் வட்டம் உருவானது. பொதுவாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு குழந்தைகளும் பார்வையாளர்களாக கிடைப்பார்கள். ஆனால், `ஆர்' ரேட்டட் சினிமாவாக உருவான டெட்பூல் பார்க்கும் வாய்ப்பே குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே இருந்தது.
 

தற்போது இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக பிஜி 13 (பெற்றோர் வழிகாட்டலுடன் பதிமூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில்) சென்சர் சான்றிதழுடன் தயாராகியிருக்கிறது `ஒன்ஸ் அப்பான் எ டெட்பூல்'. சைல்ட் ஃப்ரெண்ட்லி டெட்பூலாக உருவாகியிருக்கும் இப்படத்திலிருந்து வரும் ஒவ்வொரு டிக்கெட் காசிலிருந்தும் ஒரு டாலரை சேரிட்டிக்கு வழங்க வேண்டும், நடிகர் ஃபெர்ட் சாவேஜ் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என இரண்டு கண்டிஷன்கள் போட்டு நடித்திருக்கிறார் ரேயன் ரெனால்ட்ஸ்.

ஃபெர்ட் சாவேஜ், 1987ல் வெளியான `த ப்ரின்சஸ் ப்ரைட்' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவரைக் கடத்தி வந்து அவருக்கு பெட்டைம் ஸ்டோரிஸாக டெட்பூல் படத்தின் முக்கிய நிகழ்வுகளை சொல்வது போல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் படம். இப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்