முகப்புஹாலிவுட்

'ஜுராஸிக் வேர்ல்ட்' ஹீரோவுடன் நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா

  | July 31, 2018 11:51 IST
Cowboy Ninja Viking

துனுக்குகள்

  • ‘தமிழன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா
  • தற்போது, ஹாலிவுட்டிலும் களமிறங்கி அசத்தி வருகிறார்
  • இப்படத்தில் ஹீரோவாக ‘ஜுராஸிக் வேர்ல்ட்’ புகழ் க்ரிஸ் ப்ராட் நடிக்கிறார்
கோலிவுட்டில் 2002-ஆம் ஆண்டு ‘தளபதி’ விஜயின் ‘தமிழன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் என்ட்ரியாகி பல படங்களில் நடித்தார். தற்போது, ஹிந்தியில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் களமிறங்கி அசத்தி வருகிறார்.

சமீபத்தில், சல்மான் கானின் ‘பாரத்’ (ஹிந்தி) படத்தில் நடிக்க ஒப்பந்தமான ப்ரியங்கா, பின் விலகுவதாக அறிவித்தார். தற்போது, ப்ரியங்கா கைவசம் ஃபர்ஹான் அக்தரின் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற ஹிந்தி படம் உள்ளது. இந்நிலையில், புதிய ஹாலிவுட் படமொன்றில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

‘கௌபாய் நிஞ்சா வைக்கிங்’ (Cowboy Ninja Viking) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோவாக ‘ஜுராஸிக் வேர்ல்ட்’ புகழ் க்ரிஸ் ப்ராட் நடிக்கவுள்ளார். ‘யுனிவர்சல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸ் புகழ் மைக்கேல் மெக்லாரன் (Michelle Maclaren) இயக்கவுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்