முகப்புஹாலிவுட்

செல்வராகவன் - சூர்யா கூட்டணியின் 'NGK' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  | March 06, 2018 12:39 IST
Ngk First Look Poster

துனுக்குகள்

 • இது சூர்யாவின் கேரியரில் 36-வது படமாம்
 • இதன் டைட்டில் ‘NGK’ என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
 • இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்
‘சி 3’ படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், படத்திற்கு ‘NGK’ என டைட்டில் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சூர்யாவே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்