முகப்புஹாலிவுட்

`தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2’ படத்தின் க்ளோ கேரக்டர் டிரெய்லர்

  | November 20, 2018 16:07 IST
The Secret Life Of Pets 2

துனுக்குகள்

  • 2016-ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’
  • தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது
  • படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூன் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
ஹாலிவுட்டில் 2016-ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்'. நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், நாம் வெளியே சென்ற பிறகு அடிக்கும் லூட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது, இதன் பார்ட் 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய க்ரிஸ் ரெநொவ்ட் தான் இதனையும் இயக்கி வருகிறார். இப்படத்தை ‘இல்லுமினேஷன் – யுனிவர்சல் பிக்சர்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ‘மேக்ஸ்' கேரக்டர் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று ‘க்ளோ' கேரக்டர் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்