விளம்பரம்
முகப்புஹாலிவுட்

அவதார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் டைட்டானிக் நாயகி

  | October 10, 2017 12:38 IST
Avatar 2

துனுக்குகள்

  • அவதார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது
  • அடுத்தடுத்த பாகங்கள் மிகப் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாராகி வருகிறது
  • ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த பத்து வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறார்
அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் வருடம் வெளியாகி மிகப் பிரம்மாண்ட வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தற்போது மிகப் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாராகி வருகிறது. இப்படத்திற்க்காக இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த பத்து வருடங்களாக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கதாநாகியாக மூலம் நடிகை கேத் வின்ஸ்லெட் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்றார்.

அதன்பின் அவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்