விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘2.0’ படத்தின் எமி ஜாக்சன் கேரக்டர் போஸ்டர்

  | October 11, 2017 16:46 IST
Amy Jackson 2.0 Character Poster

துனுக்குகள்

  • ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்
  • இப்பாடலின் ஷூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது
  • எமி ஜாக்சனின் கேரக்டர் போஸ்டரை ஷங்கர் வெளியிட்டுள்ளார்
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால்ஷீட் டைரியில் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் இருக்கிறது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கெனவே, தொடங்கப்பட்ட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்.
 
சூப்பர் ஸ்டார், எமி கலந்து கொள்ளும் இப்பாடலின் ஷூட்டிங் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் எமி ஜாக்சனின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்