விளம்பரம்
முகப்புகோலிவுட்

யுவனின் 20 ஆண்டுகால இசைப்பயணம்

  | February 28, 2017 22:18 IST
Yuvan Shankar Raja Songs

துனுக்குகள்

  • பதினாறாவது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்
  • உலகத்தர இசையை நம்முள் படரவிட்டு மெய் சிலிர்க்க செய்வார்
  • தன்மை குழையாமல் நமக்கு பரிமாறிய இசையமைப்பாளர்களில் ஒருவர்
எத்தனை மெனக்கெட்டாலும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் இசைக்கோர்ப்பில் தனித்துவமான ஸ்டைல்/பாணி அமைந்துவிடும். அந்த ஸ்டைலை உடைப்பது சாதாரணமான காரியம் இல்லை.

சமகால இசையமைப்பாளர்களில் தனக்கென உருவான இசைநடையை (pattern) உடைத்து, உடைத்து வித விதமாக மாற்றி எழுதிய ஒரு மேதை யுவன் ஷங்கர் ராஜா.

ஒரு விளையாட்டாகவே இவர் இதை செய்து வருகிறாரா என்று என்னும் அளவிற்கு அத்தனை வகையான இசையிலும் அவர் பெயரை காலத்திற்கும் சொல்லும் மெட்டுக்களை அமைத்திருக்கிறார்.
Who am I, Billa theme, மங்காத்தா என western இசையில் அடித்து கிளப்புவார் , அதே சமயம் "மக்க கலங்குதப்பா", "சண்டாலி உன் பாசத்தால" என மண் மனம் மாறாமல் கிராமிய மெட்டுகளை மீட்டுவார், இதன் ஆச்சர்யம் அடங்குவதற்கு முன் Walking in the rainbow போன்ற உலகத்தர இசையை நம்முள் படரவிட்டு மெய் சிலிர்க்க செய்வார் .

இசையின் பல பரிணாமங்களை, அதன் தன்மை குழையாமல் நமக்கு பரிமாறிய இசையமைப்பாளர்களில் யுவன் மிக முக்கியமான ஒருவர்.

என்னதான் அனைத்து இசையமைப்பாளர்களும் அனைத்து வித இசை வகையில் கால் பதித்தாலும், ஏதாவது ஒன்று அவர்களை அறியாமல் strong zone ஆக மாறி மற்றோரு இசை வகை அவர்களுக்கு அந்நியப்பட்டிருக்கும், ஆனால் அத்தனை இசை வகையிலும் அதன் தனித்துவம் சற்றும் பிசகாமல் கேட்பதற்கு இனிமையான இசைக்கோர்ப்புகளை உருவாக்குவது வெகு சிலரால் மட்டுமே சாத்தியம்.

அந்த வெகு சிலரில் யுவனை தாராளமாக முதல்வன் என்றே சொல்லலாம். தனது பதினாறாவது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் இன்று இசை உலகின் 20 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

வாழ்த்துக்கள் யுவன் , மேலும் ஐம்பதாண்டு காலம் உங்கள் இசையால் எங்களை ஆள

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்