முகப்புகோலிவுட்

விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜின் ’60 வயது மாநிறம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  | August 18, 2018 12:02 IST
60 Vayadhu Maaniram Movie

துனுக்குகள்

  • விக்ரம் பிரபு கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இதில் முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ளனர்
  • இது ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற கன்னட படத்தின் ரீமேக்காம்
சூர்யாவின் ‘பக்கா’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு கைவசம் தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’, ராதாமோகனின் ’60 வயது மாநிறம்’ மற்றும் N.V.நிர்மல் குமார் படம் ஆகிய 4 படங்கள் உள்ளது. இதில் ’60 வயது மாநிறம்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இதற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜி வசனம் எழுதியுள்ளார். இதனை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இது ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற கன்னட படத்தின் ரீமேக்காம். சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்