முகப்புகோலிவுட்

இசைஞானி இசையில் 9 கல்லூரி மாணவிகள்

  | January 16, 2019 11:28 IST
Ilaiyaraaja

துனுக்குகள்

  • இசைஞானிக்கு 75 வயது ஆகிறது.
  • தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு பவள விழா நடத்த திட்டமிட்டுள்ளது
  • இசை உலகின் ஜாம்பவான் இவர்.
இசைஞானியின் 75வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னையில் பெண்கள் கல்லூரிகளில் அவருக்கு சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. அவரது  பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கலகலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன்  அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும்  மாணவிகள் தங்கள்  விருப்பத்தை கூறினர்.

மாணவிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டு கல்லூரிகளிலும் இசையில் விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து  இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் அவர்கள் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்