முகப்புகோலிவுட்

ஓவியாவுக்காக சிம்பு பாடிய 'காதல் கடிக்கிது' பாடல்

  | May 04, 2018 12:41 IST
Oviya 90ml

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஓவியா
  • ஓவியா கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். விமலின் ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக என்ட்ரியான ஓவியா, ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஓவியா நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு ஓவியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஓவியா கைவசம் விஷ்ணுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ராகவா லாரன்ஸின் ‘முனி 4’ (காஞ்சனா 3), விமலின் ‘K2’, ’90ml’ ஆகிய 4 படங்கள் உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ’90ml’ படத்தை ‘குளிர் 100°’ புகழ் அனிதா உதீப் இயக்குகிறார். நடிகர் சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
‘Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக சிம்பு ‘காதல் கடிக்கிது’ என்ற பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் கம்போஸிங் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ரிலீஸாகி வைரலாக பரவி வருகிறது. வெகு விரைவில் இப்பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்