முகப்புகோலிவுட்

"பல்வேறு உணர்வுகளை பதிவு செய்திருக்கும் சிறந்த படம் ‘96’ " – இயக்குநர் சேரன்

  | October 08, 2018 14:52 IST
96 Review

துனுக்குகள்

  • கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘96’
  • இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார்
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்த இதற்கு மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகரும், இயக்குநருமான சேரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “96 படம் பார்த்தேன். நெஞ்சை தொட்டது.. எல்லாரும் சொல்றாங்க அது ‘ஆட்டோகிராஃப்’ போலனு.. இல்ல அது வேற இது வேற.. அது கடந்து வந்த காதல்களை நினைத்து பார்த்து காதலையும் தாண்டி இந்த உலகில் நாம் வாழ நிறைய அத்தியாவசியங்கள் இருக்குனு சொன்ன படம்.

‘96’ ஒரு அழகான கவிதை. தங்கள் காதலை தொலைத்த இருவர் 20 வருடங்களுக்கு பின் சந்திக்கும் போது இருவரின் தவிப்பு உணர்வு அழுத்தம் பாசம் ஏமாற்றம் ஆற்றாமை தோல்வியின் வலி என இருவருக்கும் இடையிலான பல்வேறு உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கும் சிறந்த படம். விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மிக சிறப்பாக நடிச்சுருக்காங்க. இயக்குநருக்கு வாழ்த்துக்கள். அனுபவித்து பார்க்க வேண்டிய படம்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்