முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’வை பாராட்டி ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்

  | November 30, 2018 16:42 IST
Rajinikanth

துனுக்குகள்

  • நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0’
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று (நவம்பர் 29-ஆம் தேதி) 3D தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0'. ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
 
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்