முகப்புகோலிவுட்

`பேட்ட' படத்திற்குப் பிறகு ரஜினி படத்தை இயக்குவது இவரா?

  | September 22, 2018 15:29 IST
Rajinikanth Next Film

துனுக்குகள்

  • ரஜினிகாந்த் கைவசம் ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது
  • சூப்பர் ஸ்டாரின் புதிய படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார்
  • இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது. இதில் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடுள்ளனர்.

‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளாராம்.

இது ரஜினியின் கேரியரில் 166-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர். வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்