விளம்பரம்
முகப்புகோலிவுட்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீஸர்

  | March 20, 2017 15:05 IST
Aaa Film

துனுக்குகள்

  • இளைஞர்களை மட்டும் குறிவைத்துவரும் ஆதிக் ரவிச்சந்திரன்
  • யுவனின் இசை டீஸரில் தெறிக்கின்றது
  • மூன்றாவது கதாபாத்திரம் என்ன என்ற வியப்பில் ரசிகர்கள்
"திரிஷா இல்லனா நயன்தாரா" என்ற படத்தின் மூலம் தமிழக திரைத்துறைக்கு அறிமுகமான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்பொழுது சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்". இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது, இப்படத்தில் சிம்பு நடித்து வரும் மூன்று கதாபாத்திரங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு டீஸரின் மூலம் அறிமுக படுத்தி வருகின்றனர் படகுழுப்பிவினர். அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரம் ஏற்கனவே அறிமுக படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் வரக்கூடிய மற்றொரு டீஸர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 

இந்த டீசரில் அஸ்வின் தாத்தாவின் மீது தம்மன்னாவிற்கு ஈர்ப்பு ஏற்படுத்துவதை போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிப்பிடிக்கும் காட்சிகளும், சிம்பு பேசும் வசனமும் மீண்டும் நம்மை "திரிஷா இல்லனா நயன்தாரா" படத்தினை நோக்கி அழைத்து செல்கின்றது.
 

மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு, மூன்றாவது கதாபாத்திரம் என்ன என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். மூன்றாவது கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற வியப்பில் அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வருடம் யுவனுக்கு இருக்கும் இசை பட்டியலில் AAA தனியிடம் பிடிக்கும் என்பது டீஸரின் பின்னணி இசையில் தெளிவாக தெறிக்கின்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்