விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மெர்சல்’ பாடல் வரியை அடுத்த படத்திற்கு தலைப்பாக வைத்த அட்லி

  | October 13, 2017 15:11 IST
Atlees Next

துனுக்குகள்

  • ‘மெர்சல்’ வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • அட்லி – விஜய் கூட்டணி அமைத்துள்ள 2-வது படம் ‘மெர்சல்’
  • மெர்சலில் இடம்பெறும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் செம லைக்ஸ் குவித்தது
‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி - ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்ஸாம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா செம ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே, வெளியான இதன் 4 பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, அட்லி மெர்சலில் இடம்பெறும் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் வரியை டைட்டிலாக ரெஜிஸ்டர் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த டைட்டில் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்திற்கா அல்லது அவரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்காகவா என்பது தெரியவில்லை.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்