முகப்புகோலிவுட்

‘சிவகார்த்திகேயன் 15’ படத்தில் நடிக்கும் ‘ஆக்ஷன் கிங்’

  | November 02, 2018 11:49 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது
  • பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள
  • இதனை ‘24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்
அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை' திரைப்படம் இந்த ஆண்டு (2018) வெளியானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘24AM ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் 15-வது படமாம். தற்போது, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘ஆக்ஷன் கிங்' அர்ஜுன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார், ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்