விளம்பரம்
முகப்புகோலிவுட்

கிடாரிக்கு வில்லனாகும் ஆக்‌ஷன் கிங்

  | March 20, 2017 11:13 IST
Movies

துனுக்குகள்

  • மீண்டும் இணைந்துள்ள சசிகுமார் - முத்தையா கூட்டணி
  • ஹன்ஸிகா - சசிகுமார்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்
  • படம் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'கொடி வீரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்த சூழ்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதால், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகையரின் தேர்வு படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை நடிகர் சசிகுமார் தன்னுடைய 'கம்பெனி புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார் என்பதாகவும் வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்