விளம்பரம்
முகப்புகோலிவுட்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது - நடிகர் மாதவன் கேள்வி

  | May 18, 2017 13:40 IST
Celebrities

துனுக்குகள்

  • ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது
  • தமிழக மக்கள் புத்திசாலிகள் அவர்கள் சரியானவற்றை தான் தேர்ந்தெடுப்பார்கள்
  • இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது,இந்நிகழ்ச்சியின் துவக்க விழா நிகழ்வின் போது “நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நீங்கள் எதிர்பார்தது போல நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஒரு வேளை காலத்தின் கட்டாயம் நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட மனிதர்களை என் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவே மாட்டேன்.

அப்படிப்பட்ட சிந்தனையில் கொண்டவர்கள் என்னிடமிருந்து இப்போதே ஒதுங்கி கொள்ளுங்கள் இல்லையெனில் நீங்கள் பெரிதும் ஏமாந்து போவீர்கள்” என்று பேசினார். “என் வாழ்க்கை அனைத்தும் நம்மை படைத்த கடவுள் கையில் உள்ளது. அவர் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதனை நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுத்துவேன், தற்போது நடிகனாக ஒரு பொறுப்பை கொடுத்துள்ளார், அதனை சரியாக செய்கிறேன் என்று நம்புகிறேன், நான் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவன் கையில் தான் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் மற்றும் அனைத்து திரையுலக வட்டாரத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் விவாதமாகவே இந்த தலைப்பு நடைப்பற்று வருகிறது.
இதனிடையே இந்த நிகழ்வு பற்றி சமீபத்தில் சென்னையில் நடிகர் மாதவன் நிருபர்களிடம் கூறியபோது, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கருத்து கேட்கிறார்கள். தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு நல்லது எது என்பது மிக நன்றாக தெரியும். சூப்பர்ர ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மிகவும் நல்லது. அவர் அரசியலில் ஈடுபடுவதை நான் எப்போதுமே வரவேற்பவன் இப்போதும் வரவேற்கிறேன்” என்றார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்