முகப்புகோலிவுட்

பெண்களை தரக்குறைவாக விமர்சிக்காதீர் – ரசிகர்களுக்கு ‘விஜய்’யின் கோரிக்கை

  | August 10, 2017 10:02 IST
Vijay

துனுக்குகள்

  • பெண் ஊடகவியலாளர் விஜய் படத்தை விமர்சித்திருந்தார்
  • ரசிகர்கள் ஊடகவியலாளரை தரக்குறைவாக திட்டி டிவிட் செய்தனர்
  • விஜய்யின் ரசிகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்
மீடியாவில் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் சமீபத்தில் தான் பார்த்த ஷாருக்கானின் படத்தோடு, விஜய்யின் ‘சூறா’ படத்தை ஒப்பிட்டதோடு விமர்சித்து டிவிட் செய்திருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள், அந்த ஊடகவியலாளரை தரக்குறைவாக திட்டி டிவிட் செய்தனர். இதனையடுத்து பெண் ஊடகவியலாளர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரணை நடத்தி விஜய்யின் ரசிகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், “சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்