முகப்புகோலிவுட்

“விவேகானந்தர் ஒரு சூப்பர் ஸ்டார்”- நடிகர் விவேக்

  | January 16, 2019 11:00 IST
Vivek

துனுக்குகள்

  • விஸ்வாசம் படத்தில் நடிகர் விவேக் நடித்திருந்தார்
  • தமிழ்த்திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்
  • தமிழ் பற்றும் பாரம்பரியத்தின் மீதும் நம்பிக்கை உடையவர்
விவேகானந்தரின் 156வது பிறந்தநாள் விழா, சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர்,
 
“இஸ்ரோவும், இந்திய அறிவியல் நிறுவனமும் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் ஒரு சூப்பர் ஸ்டார்' சகோதர சகோதரிகளே என்று விவேகானந்தர் சொல்லியதுதான் முதல் பஞ்ச் டயலாக்.
 
விவேகானந்தர் சிகாகோவில் பேசிய போது சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கினார். அதைவிட சிறந்த பஞ்ச் டயலாக் உண்டா?. அந்த விழாவே அனைவருக்குமானதாக இருந்தது, அந்த விழாவில் இவ்வாறு பேசி அங்கு சூப்பர் ஸ்டாரானார் விவேகானந்தர் என்று கூறினார். மாணவ மாணவியர்களுடன் நீண்ட நேரம் பேசிய அவர் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும் வழங்கினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்